நுட்பம் காண் 2019

Home / நுட்பம் காண் 2019
நுட்பம் காண் 2019- நவீன தொழில்நுட்ப வசதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக நல தேடல்.

சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை ஆராய்வதோடு அவற்றுக்கான தீர்வுகளையும் நவீன தொழில் நுட்பத்தினூடாக பெற்றுத்தரும் களமாக அமையவுள்ளது இந்த நுட்பம் காண் 2019. நீங்களும் ஒரு சமூக ஆர்வலரா ? அல்லது தொழில்நுட்ப வல்லுநரா? உங்கள் அனைவரையும் கரம் கோர்க்க அழைக்கிறோம் நாம் உங்கள் ஐ-சமூகம் (iCommunity) நிறுவனத்தினர். பொங்கலன்று மாலை 5 மணி முதல் காந்திப் பூங்காவில் இடம்பெறவுள்ள இந்தப் புரட்சித்தேடலில் தவறாது கலந்து கொண்டு உங்களுடைய பார்வையில் சமூகத்திலுள்ள பாரதூரமான பிரச்சனைகளை முன்வையுங்கள். அப்பிரச்சனைகளுக்கு நேர்முக மாற்றமொன்றின் மூலமான தீர்வொன்று என நீங்கள் எதிர்பார்க்கும் விடயத்தையும் குறிப்பிட்டு எமது நடுவர் அணியிடம் சமர்ப்பியுங்கள்.

மக்களுக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட இத்தீர்வுகள் ஆராயப்பட்டு எமது நடுவர் அணியினால் தீர்மானிக்கப்படும் சிறப்பான தீர்வொன்றிற்கு Alexa ஒன்று பரிசாக i-சமூகத்தினரால் வழங்கப்படவுள்ளது.